Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களை விடவும் வடக்கு, கிழக்கு, மத்திய, தென் மாகாணங்களின் சுகாதார நிலைமை மற்றும் அதனால் ஏற்படும் சமூக பொருளாதார பக்க விளைவுகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமாகவே இருக்கின்றனவென, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.
இது குறித்து அவர், விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அதிக அவதானம் தலைநகரம் உட்பட மேற்கு கரையோர பிரதேசங்களில் வாழும் திக்கற்ற மக்கள் மீதே காட்டப்படுவதாகவும் நாட்டின் ஜனத் தொகையில் சுமார் ஐந்தில் ஒரு சதவீதமானோரே இங்கே வாழ்வதாகவும் இதுவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை மோசமடைய முக்கிய காரணமாக அமைந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏனைய மாகாண மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள அவர், இதனால்தான் மேற்கு கரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஊரடங்கு, முழு அடைப்பு (Lock-down) நிலவுவதாகவும் கூறியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு முக கவசம் வழங்குமாறு, பெருந்தோட்ட நிறுவன சம்மேளன செயலாளர் நாயகம் லலித் ஒபயசேகரவுக்கு கூறியதாகத் தெரிவித்த அவர், பெருந்தோட்ட தொழில் தடையின்றி நடைபெற வேண்டுமென்றால், இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அவருக்கு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவெளை, பெருந்தோட்ட பகுதி குறித்து, சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் விசேட கவனம் செலுத்துவதாகக் கூறியதாகவும், மனோ கணேசன் கூறியுள்ளார்.
“பெருந்தோட்ட தொழில் ஊரடங்கு வேளையிலும் நடைபெற வேண்டும், தோட்ட தொழிற்சாலைகள் இரவு நேரத்திலும் தொழிற்பட வேண்டும், தொழிலாளர்களின் வருமானத்துக்கு பாதகம் ஏற்படாவண்ணம் தடையின்றி தொழில் வழங்கப்பட வேண்டும், நெல் வயல்களில் விவசாயம் செய்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தோட்ட தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கை கருத்துகள் சர்வ கட்சி கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் பொலிஸ் மாதிபர், மலையக பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை உடன் வழங்குவார்” என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
55 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
4 hours ago