Yuganthini / 2017 ஜூன் 08 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாணசபை விவகாரம் தொடர்பில் முதல்வரின் நகர்வு சரியானது எனத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், வடமாகாணசபை தொடர்பில் பேச எனக்கு தார்மீக உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் மிகவும் பிரபல மாகாண சபைகளானவை, வட மாகாணசபையும் கிழக்கு மாகாணசபையுமே ஆகும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்நாட்டில் அதிகாரப் பகிர்வு கோரி போராடியது, தமிழர்களாகும். அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் இரண்டையும் முன்னெடுத்துப் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்தவர்கள், தமிழர்கள் ஆகும். ஆகவே, அதிகாரப்பகிர்வின் ஒரு கட்டமாக மாகாண சபைகள் வழங்கப்பட்ட போது, உருவாகிய நிலைமையை அரசியல் ரீதியாக சமாளிக்கவே, ஏனைய ஏழு மாகாணங்களுக்குமாக இந்த முறைமையை ஜனாதிபதி ஜே.ஆரும் பிரதமர் ராஜீவும் அறிமுகப்படுத்தினார்கள்.
ஆகவே, இன்று தெற்கில் இருக்கின்ற மாகாண சபைகள் சும்மா கிடைத்தவை ஆகும். ஆனால், வடக்கிலும் கிழக்கில் அவை சும்மா கிடைக்கவில்லை என்பதைப் பொறுப்புகளில் உள்ளோர் உணர வேண்டும். ஆகவே, ஏனைய மாகாண சபைகளில் குழப்பம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? என்று கேள்வி கேட்டு வடக்கு - கிழக்கில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு எவரும் சப்பை கட்டுக் கட்ட முடியாது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் முதல்வர் விக்கினேஸ்வரன் ஒரு விசாரணைக் குழுவை நியமித்து அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளமை, நல்ல முற்போக்கான நடவடிக்கையாகும். தனி ஒரு நாட்டைக் கோரிய உங்களுக்கு, ஒரு மாகாணச்சபையையே பரிபாலிக்க முடியவில்லையா எனத் தெற்கில் எழும் கூச்சலுக்கு உரிய பதிலைத் தரும் பொறுப்பு முதல்வரிடம் இருக்கின்றது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago