Editorial / 2020 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்துக்கு ஊடக சந்திப்பு நடத்த சென்ற மணிவண்ணன் மற்றும் ஆதரவாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன், தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்க இன்று கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மணிவண்ணனின் ஆதரவாளர்களை வெளியேற்றியதுடன் கட்சி அலுவலகம் மூடப்பட்டது
இதனால் மணிவண்ணனின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன், மணிவண்ணனின் அலுவலகத்துக்கு முன்பாக ஆதரவாளர்கள் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago