2026 ஜனவரி 10, சனிக்கிழமை

’’விஷ ஊசி ஏற்றப்படவில்லை’’

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரிடம் சரணைடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் வட மாகாண சபையோ, சுகாதார அமைச்சோ எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் முகமாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இது தொடர்பில் எமது அமைச்சின் ஊடாக வடக்கில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 300 பேரை விசேட வைத்தியர் குழுவின் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.

இந்த பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்தனர். புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பலர் பரிசோதனைகளில் கலந்துகொள்ளவில்லை. அவர்களை பலாத்காரமாக வரவழைக்கவும் முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .