Editorial / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருவாக்காட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் சீர்குலைக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அருவக்காடு குப்பை சேகரிக்கும் பிரிவில் நேற்று (07) இரவு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் அப்பகுதியை சோதனையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தாங்கி வலுவான கொங்கிரீட்டினால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீதேன் வாயு காரணமாக வெடிப்பு ஏற்பட முடியாது என அபிவிருத்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விசாரணை நடவடிக்கைகளுக்கு மத்தியில் கழிவு பிரிவின் செயற்பாடுகள் தடங்கலின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago