Editorial / 2018 மார்ச் 28 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் துங்-லாய் மார்க், ரொமேனியா தூதுவர் கலாநிதி. விக்டர் சியுத்தியா மற்றும் சுவிட்ஸர்லாந்தின் தூதுவர் ஹெய்ன்ஸ் வோல்கர் ஆகியோர் கண்டி மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்த பிரிவெனாவின் பிரதம குருவான சங்கைக்குரிய திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரை சந்தித்து தூதுவர்கள் கலந்துரையாடினார்.
இதன்போது, பரிமாறல் மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலின் போது ஏனைய மதத்தலைவர்களுடன் திட்டமிட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதனூடாக மீண்டும் முன்னர் ஏற்பட்டதை போன்ற வன்முறை இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதை தூதுவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
குறிப்பாக மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களை கொண்ட நாடாளுமன்ற குழு உருவாக்கப்பட்டு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட முன்வந்துள்ளதை தூதுவர்கள் வரவேற்றிருந்தனர்.
இதேவேளை, கண்டி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களையும் இந்தக் குழுவினர் சந்தித்தனர்.
உயிரிழப்பு, உடைமைகள் சேதம், பள்ளிவாசல்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் வியாபாரங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தூதுவர்கள் தமது கவலையை தெரிவித்தனர்.
"கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள், தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்த வேண்டிய தேவையை மேலும் வலியுறுத்தியுள்ளன. சமய மற்றும் இன வெறுப்புணர்வூட்டும சம்பவங்கள் பற்றி கவனம் செலுத்தாவிடின் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகள் பற்றி இலங்கையர்கள் அறிவார்கள்.
அரசியல், சமய மற்றும் சமூக தலைவர்கள் முன்வந்து இந்த வெறுப்புணர்வூட்டும் பேச்சுகள் மற்றும் இன வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெறுப்புணர்வூட்டும் குற்றங்களுக்கு பாரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும்" என தமது விஜயத்தின் இறுதியாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தூதுவர்கள் கருத்து வெளிளிட்டனர்.
30 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago