George / 2017 ஜூன் 15 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
“ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டவர்களே இன்றும் கடமையில் உள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெறும். இந்நிறுவனத்தின் பணிப்பாளர்களையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளோம்” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் இதனைக் கூறினார்.
“ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், தற்போது அதிக நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டதா?” என, ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித, “இது தொடர்பில், நேற்று (நேற்று முன்தினம்) பேசப்பட்டது. இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்” என்றார்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago