2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

புசல்லாவையில் வாகன விபத்து : 10 பேர் படுகாயம்

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் புசல்லாவை வகுக்கப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று ஜீன்ஸ் வீதி முதலாம் குறிச்சியைச்சேர்ந்த  15 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பம் ஒன்று நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்று விட்டு புத்தளம் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கிச்சென்று கொண்டிருந்தபோது இவர்கள் சென்ற வேன் புசல்லாவை இரட்டைப்பாதை கெலேகால என்ற பகுதியில் நேரெதிரில் வந்த லொறி ஒன்றுடன் மோதியுள்ளது. இந்தச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் வேளையில் இடம் பெற்றுள்ளது.

இதன்போது முறையற்றவகையில் வாகனத்தைச் செலுத்தி வந்த லொறியின் சாரதி சம்பவம் இடம் பெற்ற இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

விபத்துக்கு உள்ளான வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது வேனினுள் 3 குழந்தைகளும் 7 பெண்களும் 5 ஆண்களும் இருந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் விசாரணைகளை மேற்கொள்ளும் புசல்லாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--