2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸின் ஜன்னலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கை 3 துண்டுகளாக முறிந்தது

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ்சுக்கு வெளியே கையை வைத்துக் கொண்டு பயணித்தவரின் கை மூன்று துண்டுகளாக முறிந்துள்ளது.

யாழ். கொடிகாமம் பகுதியிலேயே நேற்று சனிக்கிழமை மேற்படி சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது:-

குருநாகலிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்ட   பஸ்ஸில்   பயணித்த கருணா எதிர்சிங்க (வயது 62) என்பவர் ஜன்னல் ஊடாகக் கையை வெளியே விட்டவாறு பயணித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பஸ்ஸை லொறியொன்று விலத்தியபோது அவரது கை அதற்குள் அகப்பட்டு முறிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X