2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

100 நாய்கள் பிடிப்பட்டன; 30 பெண் நாய்களுக்கு கர்ப்பத்தடை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதியில் திரிந்த 100 நாய்கள் வரை பிடிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 பெண் நாய்களுக்கு கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிருகங்கள் மீது கருணை காண்பிக்கின்ற தனியார் நிறுவனத்தின் மிருக வைத்தியர் நுவான் குமாரசிங்கவே மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மிருகங்களை வலைகளை கொண்டே பிடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--