Editorial / 2018 மார்ச் 14 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு மிக முக்கிய காரணகர்த்தா எனச் சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அதற்கு முன்னதாக, அவ்விருவரையும் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீங்குவதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி எடுத்துவருவதாவும் அறியமுடிகின்றது. அவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவ்விருவருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென, அக்கட்சியின் தலைவருக்கு, கட்சி முக்கியஸ்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கண்டியில் இடம்பெற்ற கலவரங்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரே காரணமென, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago