2020 நவம்பர் 28, சனிக்கிழமை

20க்கு எதிராக எதிர்ப்பு வாகன பேரணி

J.A. George   / 2020 ஒக்டோபர் 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) மற்றும் நாளை (22) ஆகிய தினங்களில் எதிரணி அதிகப்பட்ச நடவடிக்கையை மேற்கொள்ளும் என, ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் விவாதம் மேற்கொண்டு நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்த சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வாகன பேரணியாக நாடாளுமன்றுக்கு வந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--