2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இலங்கை வந்த பிரித்தானிய சிறுமி மீது வல்லுறவு; காலியில் சம்பவம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 14 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உல்லாசப் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 14 வயது சிறிமியொருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று காலி, தல்பே பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஹோட்டலின் முகாமையாளராலேயே மேற்படி சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று காலியிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பிலுள்ள உல்லாசப் பயணிகள் பொலிஸிலும் சிறுமியின் பெற்றோரால் சம்பவம் தொடர்பான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுமுறையினைக் களிப்பதற்காக தனது பெற்றோருடன் இலங்கை வந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X