2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மட்டக்களப்பில் மாதர் அபிவிருத்திச் சங்க நிலையங்கள் திறப்பு

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}மட்டக்களப்பு மாவட்டத்தில்  3 மாதர் அபிவிருத்திச்சங்க நிலையங்கள் வாகரை, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனால் இன்று திறந்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் மேற்படி மாதர் கிராமிய அபிவிருத்தி கட்டிடங்களுக்கான நிதியினை அவர் ஒதுக்கீடு செய்திருந்தார்.

தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான 3 கட்டிடங்களும் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி பணிப்பாளர் கே. அருந்தவராஜா மற்றும் முதலமைச்சரின் செயலாளர் திருமதி நடராஜப்பிள்ளை ஆகியோரின் பங்குபற்றலுடன் மேற்படி கட்டிடங்கள் பாவனைக்காக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--