2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பொலிஸ் அதிகாரியின் போலி இறப்பர் முத்திரையுடன் நடமாடிய நபர் கைது

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் இறப்பர் முத்திரையை ஒத்த போலியான றப்பர் முத்தரையைப் பயன்படுத்தி பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற நபரொருவரை ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

23 வயதுடைய இந்த சந்தேக நபரிடம் போலி இறப்பர் முத்திரையுடன் வதிவிடத்தை உறுதி செய்கின்ற பொலிஸ் நிலையப் பற்றுச் சீட்டுப் புத்தகமொன்றினையும் மேலும் பல ஆவணங்களையும் மீட்டதாக ஹட்டன் பொலிஸாரர் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபர் கடற்படையில் பணிபுரிந்துள்ளதாகவும் இந்த சந்தேக நபரிடம்  மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளைத் தொடர்ந்து  இவரை ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X