2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பிக்குவுக்குப் பிடிவிறாந்து

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீதிமன்றத்தில் ஆஜராகாத பெளத்த பிக்கு ஒருவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சாகும் உண்ணாவிரதம் இருந்தார்கள் என 12 பெளத்த பிக்குகளுக்கு எதிராக கோட்டை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

பிக்குகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளான சுனில் வட்டகல மற்றும் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி, பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்ட ஜெனரேட்டர் மூன்று மெத்தைகைகளை மற்றும் நிதி சேகரிக்கும் உண்டியல் என்பவற்றை திருப்பி ஒப்படைக்கவில்லை என்றனர். இதற்குப் பதிலளித்த பொலிஸ் பரிசோதகர் லலித் சிலோகம, இவைகள் கோட்டை பொலிஸாரிடம் இல்லை எனவும் இவைகள் அனைத்தும் கொம்பனித்தெரு பொலிஸாரிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொள்ளும் படி பாதுகாப்பு சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் பௌத்த பிக்குமார்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை  நீதவான் ஒத்திவைத்தார்.


  Comments - 0

  • junaideen-pottuvil Saturday, 21 August 2010 05:38 PM

    விமல் வீரவன்சவின் வழக்கு எப்போது ?அப்படி ஒரு வழக்கு போடப்பட்டுள்ளதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .