Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 2,744 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் இவ்வாண்டுப் பரீட்சையில் தோற்றுகின்றனர். இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பரீட்சை நண்பகல் 12 மணிவரையில் நடைபெறவுள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான வினாத்தாள்கள் இரு பகுதிகளாக வழங்கப்படவுள்ள நிலையில், முதலாவது வினாப்பத்திரம் 45 மணித்தியாலங்களையும் இரண்டாவது வினாப்பத்திரம் ஒன்றரை மணித்தியாலங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது.
மாணவர்கள் பரீட்சை வினாத்தாள் கிடைத்தவுடன் தமது சுட்டிலக்கத்தை எழுதுவதற்கான ஆலோசனையை மாணவர்களுக்கு வழங்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களது பெற்றோர் தமது பிள்ளைகளை, அதிபர்களிடம் ஒப்படைக்குமாறும் பரீட்சை முடியும் வரை தமது பிள்ளைகளை சந்திப்பதற்காக உள்ளே செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டாம் என்றும் பரீட்சையை மிகவும் மகிழ்ச்சியாக எழுதும் சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
1 hours ago