2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பல்கலை மாணவன் மரணம்: பொதுமக்களின் சாட்சியங்களை கோருகிறது ஆணைக்குழு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

றுகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணம் தொடர்பில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க விரும்புவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் தொடர்பு கொள்ளுமாறு நீதிபதி டி.ஜே.டி.எஸ்.பாலப்பட்டபந்தி தலைமையிலான ஆணைக்குழு தெரிவித்தது.  

றுகுணு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவனான சுசந்த அருண பண்டார,  பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பொலிஸாரினால் தாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவன் கடந்த ஜுலை மாதம் 2ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--