Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்த்ய சேனநாயக்க)
இலங்கைப் பணிப் பெண்ணின் உடலில் 23 ஆணிகளை ஏற்றிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சவூதி அரேபிய அதிகாரிகள் வலியுறுத்தப்படுவர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்கு மூலம் மொழிபெயர்க்கப்பட்டு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கண்டிப்பதாகவும், இவ்வாறான நடத்தைகளை சிவில் சமூகமொன்றிலிருந்து எதிபார்க்கவில்லை எனவும் இவ்வாறான செயற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாது எனவும் கிங்கிஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பாதிக்கப்பட்டவருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் தனது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தாமல், பேரிட்சை மர முள் குற்றியதாக தெரிவித்துள்ளார். எனினும் விசேட வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்ற பின் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
22 minute ago
24 minute ago
52 minute ago
18 Sep 2025
junaideen-pottuvil Wednesday, 25 August 2010 05:19 AM
என்ன கொடுமை இது? இப்படியெல்லாம் உழைத்து அனுப்பும் காசில் தான் எம்பிக்களுக்கு பெஜெரோ வாகனம் வாங்கவேண்டும் அரசு .
Reply : 0 0
firazcassim@yahoo.com.sg Wednesday, 25 August 2010 09:24 PM
இப்படி ஆயிரக்கணக்கில் நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது எனது அனுபவ உண்மை , இன்னும் எழுதலாம் பல உண்மைகளை.
Reply : 0 0
xlntgson Thursday, 26 August 2010 09:57 PM
சூனியம் செய்து விட்டார்களோ? இல்லாவிட்டால் அவர் இலங்கைக்கு வரு முன் கழற்றி அனுப்பி இருப்பார்கள் அல்லவா, வேலை கடுமையாக வாங்க பயம் உண்டு பண்ண கொடுமை நோக்கத்தில் செய்திருந்தால்.சில அரபியர் இன்னமும் சூனியம் செய்வதில் நம்பிக்கை உள்ளவர்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
24 minute ago
52 minute ago
18 Sep 2025