2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து புதன்கிழமை ஐ.தே.க. பதிலளிக்கும்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி  முறைமையை  தொடர்ந்து வைத்திருக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் குழு மற்றும் செயற்குழுவின் ஒருங்கிணைந்த கூட்டத்தின் பின்னர் பதிலளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.  

இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கபீர் ஹாசீம், மங்கள சமரவீர, அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசியலமைப்பு சபைக்கு பதிலாக 5 பேர் கொண்ட குழுவை நியமிக்கும் விடயம் தெளிவில்லாமல் உள்ளது. அந்தக் குழுவுக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .