2020 நவம்பர் 25, புதன்கிழமை

நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி.

Super User   / 2011 ஜனவரி 12 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மரக்கறி விற்பனை போன்ற சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தை ஈடுபடுத்துவதானது முழுநாட்டையும் இராணுவ மயப்படுத்துவதற்கான முதற்படியாக இருக்கலாம் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கூறியுள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையில் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.  பொருளாதாரத்தையும் அரசியல் விவகாரங்களையும் கையாள்வதில் அசாங்கம் முற்றிலும் தகுதியற்றிருப்பதாக அவர் கூறினார்.

'மரக்கறி விற்பனையில் ஈடுபடுத்தியதன் மூலம் இராணுவத்தை அரசாங்கம் பரிகசிப்புக்கிடமாக்கியுள்ளது. அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு போன்ற வேறு கடமைகள் உள்ளன. எவ்வாறெனினும் ஓரிரு சந்திகளில் மரக்கறி விற்பதன் மூலம் மரக்கறிகளின் விலையை குறைக்க முடியும் என நாம் நம்பவில்லை' என ரில்வின் சில்வா தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .