2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

நடைபாதை வியாபாரிகளுக்கு தனியிடம் வழங்க நடவடிக்கை: கொழும்பு மாநகர சபை

Kogilavani   / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

புறக்கோட்டை, நொறிஸ் கனல் வீதி,  டீன்ஸ் வீதி ஆகிய இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு வேறு இடங்கள் வழங்கப்படும் என கொழும்பு மாநாகரசபை இன்று அறிவித்தது.

நொறிஸ் கனல் வீதி, டீன் வீதி, புறக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள மூன்று கட்டிடங்களில் இவர்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொழிலை தொடங்க கூடியதாக இருக்கும் என மாநகரசபையின் பிரதம நிர்வாக அதிகாரி ஓமர் காமில் கூறினார்.

இந்த வியாபாரிகள் நாளொன்றுக்கு 50 ரூபா வாடகை செலுத்த வேண்டும் எனவும் இதைவிட இவர்கள் குறிப்பிட்ட தொகையை வைப்பு செய்ய வேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--