Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைச்சர்களினதும் அரச உயர் அதிகாரிகளினதும் புத்திஜீவிகளினதும் சாட்சியங்களையே பெற முயற்சிக்கின்றது தவிர யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை பெற முயற்சிக்கவில்லை என மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
தேசிய சமாதான பேரவையினால் பிரஜைகள் சமாதான விருதை இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,
"யுத்தத்திற்கு பின்னரான தற்போதைய சூழ்நிலையில் நல்லிணக்கம் தேசிய தேவையாக உள்ளது. இதற்கான சாட்சியங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே பெற வேண்டும்.
தற்போது நாட்டில் நிலைமை மீண்டுமொரு யுத்தத்தை தூண்டக்கூடியதாகவே உள்ளது. இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும்.
மாறுபட்ட கருத்துக்களை கூறுபவர்கள் தேச துரோகி என அழைக்கப்படுகின்றனர்.
தற்போது நாம் குறைந்தளவான வெற்றிகளையே பெற்றுள்ளோம். இன்னும் பல வெற்றிகளை பெற நாம் உழைக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025