2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிள் வெட்டிக்கொலை

Super User   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ், குசால் சமத்)

பாணந்துறை மொரட்டு மோதரை பகுதியில் 28 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மன்னா கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை இரு குழுக்களுக்கிடையில் நடந்த மோதலை நிறுத்துவதற்கு அவர் தலையிட்டபோதே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

மொரட்டு-மோதர பகுதியில் இரு குழுக்களுக்கடையில் வாள்கள், பொல்லுகள் சகிதம் மோதல் இடம்பெறுவதாக பிரதேச வாசிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மொரட்டுமோதர பகுதிக்கான குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் குழுவொன்றுடன் சந்தரவிமல சமரவிக்கிரம எனும் மேற்படி கான்ஸ்டபிள் அப்பகுதிக்கு சென்றிருந்தார்.

அதிகாலை ஒரு மணியளவில் பொலிஸ் குழுவினர் மோதல் இடம்பெற்ற இடத்தை அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வேளை ஒரு நபர் மன்னா கத்தியால் மேற்படி கான்ஸ்டபிளை தாக்கியுள்ளார். தலையில் காயமடைந்த அக்கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழந்தார்.

அதன்பின் இக்கொலையுடன் தொடர்புயை நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் அப்பகுதியில் கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்போது ஒரு நபர் கைது செய்யப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .