2021 மார்ச் 06, சனிக்கிழமை

வெளிநாட்டு மதுபானங்களின் விலை அதிகரிப்பு

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மஹிந்த நிசங்க)

விஸ்கி மற்றும் பிரண்டி உட்பட உள்நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வெளிநாட்டு மதுபானங்களினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என டிஸ்டிலர்ஸ் (லங்கா) கம்பனி அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 25 சதவீத வரி அதிகரிக்கப்பட்டது.  இதனையடுத்தே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் ஒரு போத்தல் விசேட சாராயம்இ புலு மற்றும் வைட் லேபல் சாராயம் ஆகியவற்றின் விலை 20 ரூபாவினாலும் ஒரு போத்தல் விஸ்கி மற்றும் பிரண்டி தயாரிப்புக்களின் விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டள்ளது என டிஸ்டைலரிஸ் (லங்கா) கம்பனி தெரிவித்தது.

எனினும் தென்னஞ் சாரயத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.


  Comments - 0

  • OBAMA Tuesday, 13 November 2012 08:49 AM

    அதன்ட விலைய கூட்டினால் பல குடும்பம் சந்தோஷம் அடைவார்கள். இன்னும் பால்மாவின் விலையை குறைப்பீர்களாக# நன்றி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .