2021 மார்ச் 03, புதன்கிழமை

தமிழக கடற்கரையோரங்களில் வெடிபொருள் எச்சரிக்கை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளுக்கும் மீனவர்களுக்கும், புலனாய்வுப் பிரிவினர் கடலில் மிதந்து வருகின்ற எந்தவிதமான சந்தேகப் பொருட்களையும் தொடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரிகளினால் முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்ட  வெடிபொருள் மிதக்கவிடப்பட்டிருப்பதாகவே புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்ததுடன்,  கடல் மற்றும் கடலோர பாதுகாப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளனர். அத்துடன் கடலில் மிதந்து வருகின்ற எதனையும் தொடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கிடைத்ததை அடுத்து தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸ் தங்களது ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்ட  வெடிபொருள் குறித்து சிவப்பு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.

ஒவ்வொரு நிலையத்தில் இரண்டு படகுகளுக்கும் மேற்பட்ட 12 கடலோர காவல் நிலையங்களை சேர்ந்தோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 14 படகுகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கடலில் ஏதாவது சந்தேகத்திற்கிடமான மிதக்கும் பொருளை பார்த்தால் அதனை தொட்டு பார்க்கவோ அல்லது பரிசோதிக்கவோ வேண்டாம் என தெரிவித்துள்ள பாதுகாப்பு பிரிவினர், அது தொடர்பில் கடலோர பாதுகாப்பு சேவைக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .