2021 மார்ச் 06, சனிக்கிழமை

ஆஸியிலிருந்து திருப்பியனுப்படுவோர் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகலிடக் கோரிக்கையாளர்களாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்களில் அங்கிருந்து திருப்பியனுப்பப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கின்றது.

அவுஸ்திரேலியாலிருந்து இலங்கைக்கு இதுவரையிலும்  திருப்பியனுப்பப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 282 ஆகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி; சென்றதாகக் கூறப்படும் 50 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 50 ஆண்களுக்கு அவர்களின் நிலைமை தொடர்பில் விளங்கப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவர்களே இவ்வாறு திருப்பியனுப்பப்படுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .