2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்கவும்: ராம்

Kanagaraj   / 2013 ஜூலை 27 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு உட்பட ஏனைய மூன்று மாகாண சபைகளிலும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி ராம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமானதும் நீதியாதுமான தேர்தலை நடத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. அப்படியென்றால் கண்காணிப்பு பணிகளிலில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஏன் ஈடுபடுத்த முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுதந்திரமான தேர்தலொன்று நடத்தப்படவேண்டுமாயின் சர்வதேச கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துவது கட்டாயமானதாகும். வடகில் மட்டுமன்றி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இராணுவத்தின் கைகளிலேயே இருகின்றன.

இதனால் பொதுமக்களின் செயற்பாடுகளும் பாதித்துள்ளன. அத்துடன் நீதியான தேர்தலொன்றை எதிர்ப்பார்க்க முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்குமாறு நாம் கோரிக்கைவிடுகின்றோம்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பேரம்பேசி எதிரணியினரை தம்வசப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது . இது ஜனநாயக நடைமுறையை மீறுவதுடன் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறுவதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இராணுவ தலையீடுகளின்றி நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தவேண்டுமாயின் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அவசியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .