2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

முதலை தாக்கி வனஜீவராசிகள் அதிகாரி காயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலை தாக்கியதில் வனஜீவராசிகள் அதிகாரியொருவர் காயமடைந்த சம்பவமொன்று வாதுவை,வெலேகம உபாசிகாராம எனுமிடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

அந்த வீதியிலுள்ள வீட்டொன்றில் எட்டு அடி நீளமான முதலையொன்று நுழைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முதலை போகொட ஆற்றிலிருந்து மழைநீருடன் கரைக்கு வந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முதலையை பிடித்த கிராமவாசிகள் அதனை வனஜீவராசிகளிடம் ஒப்படைப்படைத்தனர். வனஜீவராசிகள் அந்த முதலையை எடுத்துசெல்வதற்கு முயன்றபோதே அந்த முதலை தாக்கியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X