2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் முருகன்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலூர் சிறையில் உண்ணாவிரதமிருந்த முருகன் தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்துகொண்டுள்ளார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது மனைவியை  பார்க்க சிறைச்சாலைக்கு வருபவர்களை சரியாக பார்க்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியும், உரிய சாப்பாட்டை வழங்குமாறு கோரியுமே அவர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று குதித்தார்.

அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகன் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நளினியும், முருகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகிறார்கள். 

முருகன், பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு வேலூர் பெண்கள் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினியை சந்தித்து பேசினார்.

அப்போது முருகனிடம் நளினி தன்னை சிறைச்சாலையில் பார்க்க வருபவர்களை சரியாக பார்க்க அனுமதிப்பது இல்லை என்றும், தனக்கு வழங்கப்படும் சாப்பாடு சரியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட முருகன் அதிர்ச்சி அடைந்தார்.நளினியை பார்வையாளர்கள் முறையாக பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் சிறைச்சாலையில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தார்.

மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தார்.  அவரிடம் சிறைச்சாலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து முருகன் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X