2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பிரித்தானியா பயண எச்சரிக்கையை புதுப்பித்தது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் எனக்கூறி 16 நிறுவனங்களையும் 424 தனியாட்களையும் இலங்கை அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி பெயர் குறிப்பிட்டதன் பின்னர் பிரித்தானியா ஏப்ரல் 17 இல் அதன் இலங்கைக்கான பயண எச்சரிக்கையை புதுப்பித்தது.

பிரித்தானிய தமிழ் அரங்கம் மற்றும் உலக தமிழ் அரங்கம் ஆகியவை உட்பட 16 நிறுவனங்களையும் 424 தனியாட்களையும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என இலங்கை அரசாங்கம் மார்ச் 21 2014இல் பட்டியலிட்டுள்ளது.

வடக்க மாவட்டங்களை யாழ்ப்பானம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவுக்கு போவதற்கு ஊடக குழுவினரை தவிர வெளிநாட்டுப் பிரஜைகள்  இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டிதில்லை  இராணுவ நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. நீங்கள் பாதுகாப்பு படைகளின் கட்டளைக்கும் நிலக்கண்ணி பற்றிய எச்சரிக்கைகளுக்கும் பணிந்து நடக்க வேண்டும்.

அரசியல் கட்டங்கள் வன்முறையில் முடிந்துள்ளன. நீங்கள் அரசியல் கூட்டங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பயங்கரவாத செயல்களில் பயமுறுத்தம் உள்ளது.

அனேகமான இலங்கை பயணிகள் பிரச்சினை இல்லாதவை. ஆயினும் நீங்கள் கடன் அட்டை மோசடி, வீதிவிபத்துக்கள்,நீரில் மூழ்குதல், நுளம்பால் பரவும் டெங்கு என்பனவற்றை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இலங்கை பெறும் புயல் பெரும் மழை ஆகிய கடுமையான வானிலையால் பாதிப்புக்குள்ளாகும். நீங்கள் பயணத்திற்கு முன்னர் அனைத்தையும் அடக்கிய பயண,மருத்துவ காப்புறுதியை பெற்றுக்கொள்ளுங்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .