2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மலையேறிய ஜேர்மன் பெண்ணை காணவில்லை

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹுன்னஸ்கிரிய, உடதும்பர தொத்துராகலை மலையில் ஏறிய ஜேர்மன் நாட்டு பிரஜையான 70 வயதுடைய பெண்ணை காணவில்லை என்று ஹுன்னஸ்கிரிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்துபேர் கொண்ட குழு இந்த மலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஏறியுள்ளது.
அதில் சென்ற இந்த பெண் சுமார் 300 மீற்றர் தூரம் ஏறியதன் பின்னர் தன்னால் இனிமேல் மலையேற முடியாது என்றும் தான் திரும்பி போவதாகவும் தெரிவித்ததாக அக்குழுவில் சென்றவர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

அதன் பின்னர், அப்பெண் தொடர்பில் எவ்வாறான தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் அக்குழுவினர் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .