2021 மார்ச் 03, புதன்கிழமை

213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Nirosh   / 2021 ஜனவரி 16 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்தில் உள்ள அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் பொலிஸாரால் நேற்று (16) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆயிரத்து 311 நிறுவனங்களில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில்,  ஆயிரத்து 98 நிறுவனங்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி வருகிற நிலையில், 213 நிறுவனங்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறி செயற்படுவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த 213 நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .