2026 ஜனவரி 14, புதன்கிழமை

217 தொழிற்சாலைகள் மீண்டும் திறப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர வர்த்தக வலயங்களிலுள்ள 217 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30,269 பணியாளர்கள், தற்போதைய நிலையில், வேலை இழந்துள்ள நிலையில் பணியாளர்களின் நலன்கருதி, 217 தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று, தொழிற்றுறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா, விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பரிந்துரைக்கு அமைவாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மேற்படி தொழிற்சாலைகளின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

ஊரடங்குச்சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுவதால், தொழிற்சாலைகளின் பணிகளைத் தொடர விரும்பும் நிறுவனங்களுக்கு, அனுமதி வழங்குவதற்கு அரசாங்கத்தால் அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

அந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, 217 தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்றும் சுமார் 20 சதவீதமான தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, தொழிற்சாலைகளை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைவாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில், 48 தொழிற்சாலைகளில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .