Editorial / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பான விவகாரம் பாரதூரமானது, ஆகையால், இதற்கு இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும்”
என்று, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனிடையே எழுந்த, தினேஷ் குணவர்தன எம்.பி, “இது நாட்டுக்கு அச்சுறுத்தல் மிக்க விவகாரம் என்பதால், விரைந்து பதிலளிக்கப்பட வேண்டும். இதற்கு பதிலளிப்பதற்கு, 3 வார காலம் எடுத்துக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டார்.
குறுக்கிட்ட அமைச்சர் திலக் மாரப்பன, “இதற்கு பதிலளிக்க 3 வார காலம் எடுத்துக் கொள்வதால், அதற்குள் நாட்டுக்கு எந்த சேதமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை” என்றார்.
இதன்போது கருத்துரைத்த சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, “எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றியே இந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் மட்டுமே ஆகிறது” என்றும் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு கருத்து மோதல்களையும் அவதானித்த, சபாநாயகர் கரு ஜயசூரிய, எவ்வாறிருப்பினும் தினேஷ் குணவர்தன எம்.பி. கேட்ட கேள்விக்கு, முடிந்தளவு விரைந்து பதிலை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
12 minute ago
35 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
35 minute ago
3 hours ago
3 hours ago