2021 மார்ச் 08, திங்கட்கிழமை

3 சிறுவர்கள் மீது பாலியல் சேட்டை புரிந்த 15 வயது சிறுவன் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தன்னுடன் விளையாடுவதற்கு வருகை தரும் சிறுவர்கள் மூவர் மீது கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கடும் பாலியல் சேட்டை புரிந்து வந்த 15 வயது சிறுவனொருவன் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை கேகாலை மாவட்டம், தெதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெலும்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

8, 9 மற்றும் 10 வயதான சிறூவர்களே குறித்த 15 வயது சிறுவனின் பாலியல் சேட்டைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரினால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தே சந்தேகநபரான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை, வரகாபொல நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தெதிகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார். (M.M)

 

 


  Comments - 0

  • xlntgson Tuesday, 07 September 2010 09:31 PM

    சிறுவனா அவன்? சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பவும் கூட தகுதி இல்லை. சுற்றுப்புற சூழலை கவனிக்க வேண்டும் அவனை யாராவது இவ்வழிக்கு கொண்டுவந்திருக்கக்கூடும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .