2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

5 நட்சத்திர ஹோட்டல்களின் பணிகள் இடைநிறுத்தம்?

Kogilavani   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று,  நட்சத்திர விடுதிகளின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
ஹில்டன், கோல்பேஸ் ஹோட்டல்களின் பணிகளே இவ்வாறு இடைநிறத்தப்பட்டுள்ளன. 

ஹில்டன் ஹோட்டலானது, வெள்ளிக்கிழமை (23) முதல் தனது பணிகளை இடைநிறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. 

மேற்படி ஹோட்டலை அண்மித்தப் பகுதியில், கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார் என்று, கொழும்பு மாநகர சபை உறுதிபடுத்தியுள்ள நிலையில், குறித்த தொற்றாளர் ஹோட்டல் வளாகத்தைச் சேர்ந்தவரா என்பதுத் தொடர்பில் இதுவரை உறுதிபடுத்தவில்லை என்றும் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை கோல்பேஸ் ஹோட்டலின் பணிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஹோட்டலின் அனைத்துப் பணிகளையும் இடைநிறுத்துமாறும் ஹோட்டலில் பணியாற்றும் சகல ஊழியர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஹோட்டல் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. 

இதேவேளை ஷங்கரிலா ஹோட்டலின் பணிகளையும் இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த ஹோட்டலில் நடைபெறவிருந்த நிகழ்வுகளையும் நிறுத்துமாறு, பொது சுகாதார பரிசோதகர்கள் பணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .