2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

50 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா கற்பிட்டியில் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் ,  கற்பிட்டி -  பாராமுன பிரதேசத்தில் கொண்டுச் செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தான கூறப்படும் 50 இலட்சம்  பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி  கடற்படைத்தளத்தின் விஜய பிரிவின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பகுதியிலிருந்து  முப்பத்து ஒன்றரை கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதெனவும்,  கூட்டு வன்முறையில் ஈடுபடும் சிலரால் இந்தியாவிலிருந்து இந்த கஞ்சா தொகை கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

எவ்வாறாயினும், இந்த கஞ்சாவை பாராமுன பிரதேசத்திலுள்ள மீன்பிடித் துறைமுகத்துக்கு யாரால் எடுத்து வரப்பட்டதென தெரியவில்லை எனத் தெரிவிக்கும் கடற்படையினர்,  அவர்கள் மீட்டெடுத்துள்ள ​போதைப்பொருளை சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--