2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

‘6 மாதங்கள் காலக்கெடு’

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தை இன்னும் ஆறுமாதங்களுக்குள் கவிழ்ப்போம் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கவிழபோகும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தான் தயாரில்லை என்றார்.

இன்னும் ஆறுமாதங்களுக்கு மேல், இந்த அரசாங்கத்தை பயணிக்கவிடமாட்டேன் என உறுதியளித்த அவர், மக்களின் மீதும் நாட்டின் மீதும் கவனத்தை செலுத்தாது, ஒரே​​யொரு குடும்பத்தை மேம்படுத்தவும், அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்குமே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டுடன் கலந்துரையாடும் போதே, மேற்கண்டவாறு ராஜித சேனாரத்ன எம்.பி, மேற்​கண்டவாறு தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--