2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

67ஆவது சு.க மாநாடு; செப். 2இல் நடைபெறாது

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 67ஆவது மாநாட்டை, செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதியன்று நடத்தாமல் விடுவதற்கு, அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட மற்றும் தொகுதி சபைகள், இளைஞர் குழு மற்றும் பெண்கள் குழு ஆகியன இன்னும் நிறுவப்படவில்லை. அவற்றை நிறுவி முடித்ததன் பின்னர், சுதந்திரக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் தலைமையில், மாநாட்டுக்கான குழு நிறுவப்பட்டுள்ளது. அதன்போதே, மாநாட்டு நடத்தப்படும் திகதி, இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் தீர்மானிக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.

தற்போதிருக்கும் தற்காலிக அதிகாரிகள் சபையை கலைத்துவிட்டு, புதிய அதிகாரிகள் சபையை நியமிப்பது, கட்சியின் மாநாட்டுக்குப் பின்னர் இடம்பெறுமென கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .