2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

11 வயதான யுவதியை பாலியல் துஸ்பிரயோகபடுத்தியவர் கைது

Super User   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏம்.இஸட்.எம் இர்பான்)

லுனுகம்வெஹெரை படவ்கம கிராமத்தில் 56 வயதுடைய நபரொருவர் 11 வயதான யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தினார் எனும் குற்றச்சாட்டில் லுனுகம்வெஹெரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோர் வெளியில் செல்லும் போது பாதுகாப்பிற்காக சித்தப்பாவின் வீட்டில் வைத்த சந்தர்பங்களிலேயே யுவதியை பல முறை பாலியல் துஸ்பிரயோகத்தில்  ஈடுபடுத்தி வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சித்தப்பாவின் தொல்லையினை தாங்க முடியாத யுவதி பாடசாலை வகுப்பாசிரியைக்கு கடிதம் ஊடாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .