2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து தாதியாக கடமையாற்றியவர் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.மன்சூர்)

போலி ஆவணங்களை சமர்ப்பித்து தாதித் தொழில் பெற்று 3 வருடகாலமாக மாத்தறை அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த தாதியொருவரை காலி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர் காலியிலுள்ள தாதியர் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ்கள், போலி ஆவணங்களைச சமர்ப்பித்து அங்கு பயிற்சி பெற்றிருந்தார்.  பின்னர், மாத்தறை வைத்தியசாலையில்; நியமனம் பெற்று கடந்த 3 ஆண்டுகளாக தாதியாகக் கடமையாற்றி வந்துள்ளார்.

தாதிப் பயிற்சி பெற்ற அதிபர், பயிற்சி பெற்ற தாதிகளின் பெயர்ப்பட்டியலை பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பியபோது அதனை பரிசீலித்த பரீட்சைத் திணைக்களம் மேற்படி தாதியின் ஆவணங்கள் போலியானதெனக் கண்டுபிடித்துள்ளது.

இதனையடுத்து, குறித்த தாதி கைதுசெய்யப்பட்டார்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--