2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கந்தூரி நிகழ்வில் ஒருவர் கொலை

Super User   / 2010 நவம்பர் 14 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.மன்சூர்)

மாத்தறை கந்தறை ஜும் ஆ பள்ளிவாசலில் நேற்று சனிக்கிழமை மாலை வருடாந்த கந்தூரி நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் மாத்தறையைச் சேர்ந்த 55 வயதான நிசார் ஹுஸைன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்த இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உரிழந்துள்ளார்.


இம்மோதலுக்கும் பள்ளிவாசலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.இக்கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .