2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில் உகண்டா ஜனாதிபதி

Kanagaraj   / 2012 நவம்பர் 14 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


உகண்டா ஜனாதிபதி யோவேறி கபுடா முஷவேனி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்து அந்த நெடுஞ்சாலையை பார்வையிட்டுள்ளார்.

 நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு  வருகை தந்துள்ள உகண்டா ஜனாதிபதியும் அவரது பாரியாரும் அந்நாட்டு அமைச்சருமான ஜெனட் கடகா முஸாமி ஆகிய இருவருமே தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பயணித்துள்ளனர்.

கொட்டாவ பிரதான நுழைவாயின் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்த இவ்விருவரும் களனிகம வரை பயணித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த முதலாவது வெளிநாட்டு தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

 • AJ Wednesday, 14 November 2012 08:30 AM

  யார் வந்தாலும் தெற்கில் பாதைகளை காட்டி உலகை ஏமாத்த வேண்டியது தான்.

  Reply : 0       0

  rima Thursday, 15 November 2012 03:36 PM

  இதுதான் இந்த அரசின் நாடகம்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .