Princiya Dixci / 2016 மே 21 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, ஆலங்கேணிப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி 1500 மில்லிலீற்றர் சாராயத்தைக் கொண்டு சென்ற நபரெருவருக்கு, 12,000 தண்டப்பணமும் அதைச் செலுத்தாத பட்சத்தில் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, நேற்று வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார்.
கிண்ணியா, நடுஊற்றுப் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், கிண்ணியா ஆலங்கேணிப் பகுதியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி 1500 மில்லி லீற்றர் சாராயத்தினை நடுஊற்றுப் பகுதிக்குச் கொண்டு சென்ற போதே கிண்ணியா பொலிஸார், வியாழக்கிழமை (19) இரவு கைதுசெய்து நேற்று (20) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
17 minute ago
21 minute ago
26 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
26 minute ago
41 minute ago