Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்
கடந்த காலத்தில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், இதற்கு அதிகாரிகள் சிலர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இனிமேலும் இந்த நிலைமை தொடரக்கூடாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
2016ஆம் ஆண்டுக்கான மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இறுதிக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று (15) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், சம்பூர் மீள்குடியேற்ற அபிவிருத்தித் திட்டங்களைப் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளில் அரசாங்கத்தின் சார்பாக சில விடயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த தமக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago