2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், எம். முபாரக்

35 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள, மூதூர் புதிய துறைமுக வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு,  இன்று (01) இடம் பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் 2016ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழேயே இந்த வீதி அபிவிருத்திசெய்யப்படவுள்ளது.

இந் நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X