2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அமைச்சின் இணைப்பாளராக ஹரீஸ் நியமனம்

Editorial   / 2018 செப்டெம்பர் 08 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர்  எம்.எஸ்.எஸ். அமீர் அலியால், கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதர அமைச்சரின் இணைப்பாளராக எம்.ரீ.ஹரீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வு, அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று  (07) மாலை இடம்பெற்றது.

இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான  அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், நாடாளுமன்ற  உறுப்பினருமான  அப்துல்லா மஹ்ரூப்  சிபாரிசின் அடிப்படையிலும் மற்றும் கட்சியின்  உயர் மட்ட உறுப்பினர்களின் ஆலோசனைக்கமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இவர், கிண்ணியா நகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  உறுப்பினர் என்பதோடு,  இவர், கிண்ணியா ஐக்கிய தேசியக் கட்சியின் கிண்ணியா நகர சபை எதிர்கட்சித் தலைவாகவும் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.தௌபீக் உட்பட ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--