Suganthini Ratnam / 2016 மார்ச் 29 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,பதுர்தீன் சியானா
அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வந்த தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை துரிதப்படுத்தி நிரந்தர நியமனம் வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஐ.எம்.மௌசர் தெரிவிக்கையில், '1998ஆம் ஆண்டிலிருந்து தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிவருகின்ற எமக்கு, 2009ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு எவ்வித முடிவும் இன்றுவரையில் கிடைக்கவில்லை' என்றார்.
'மேலும், எம்மால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களின்போதும், நிரந்தர நியமனம் வழங்குவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை முடித்து விடுவார்கள். ஆனால், எமக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
இனியும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிட்டாவிடில் மீண்டும் காலவரையற்ற சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப்படும்' என்றார்.
'மேலும், கிழக்கு மாகாணத்தில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றித் தெரிவாகிய தமிழ் பேசும் 380 தொண்டராசிரியர்களில் 16 பேருக்கு 45 வயதுக்கு மேலாகியுள்ளது. எனவே தொடர்ந்து இந்த இழுபறி நிலை தொடருமானால் இவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்' என்றார்
19 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
6 hours ago