2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

அலைபேசித் திருட்டு தொடர்பில் இருவர் கைது

Thipaan   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பேராறு பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டியிலிருந்து அலைபேசியொன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், இரு இளைஞர்களை, நேற்று (18) மாலை கைதுசெய்துள்ளதாக கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த   ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று, அலைபேசி திருடப்பட்டதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, 19 மற்றும் 21 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.

அலைதொலைபேசியின் இரகசிய இலக்கத்தைக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணையின் பிரகாரம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .